பயிற்சி - 7

ஆங்கில பாடப் பயிற்சி 19 (will be able to)
Grammar Patterns -1 றில் 23 மற்றும் 24 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். அவ்விரண்டு வாக்கியங்களையே இன்று விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து இலக்க வரிசையில் தொடரும் படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியைத் தொடர எளிதாக இருக்கும்.

ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்தும் நிகழ்கால வாக்கிய அமைப்புக்களை (can, am/is/are able to +) ஆங்கில பாடப் பயிற்சி 16 இல் கற்றோம். அவற்றின் இறந்தக்காலப் பயன்பாடுகளாக (could, was/were able to +) ஆங்கில பாடப் பயிற்சி 17 இல் கற்றோம். இன்று இவற்றின் எதிர்காலப் பயன்பாடுகளை பார்ப்போம்.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். அதாவது ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்துவதற்கான சாதாரண எதிர்கால (Simple Future Tense)வாக்கியங்கள். இந்த வாக்கிய அமைப்புகளில் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will be able to" மட்டுமே பயன்படுகின்றது. கீழே கவனியுங்கள்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + will be + able + to do a job.

Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + won’t be + able + to do a job

Question (Interrogative)
Be + subject + be able + infinitive
Will + I /you /he /she /it /you /we /they + be able + to do a job?

+ be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான விணைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)

சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.

Will you be able to do a job?
உனக்கு செய்ய முடியுமாக இருக்குமா ஒரு வேலை?
Yes, I will be able to do a job.
ஆம், எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
No, I won’t be able to do a job. (will + not)
இல்லை, எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

Will you be able to speak perfect English very soon?
உனக்கு பேசமுடியுமாக இருக்குமா முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்?
Yes, I will be able to speak perfect English very soon.
ஆம், எனக்கு பேசமுடியுமாக இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.
No, I won’t be able to speak perfect English very soon.
இல்லை, எனக்கு பேசமுடியாமலிருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.

Will you be able to go to university next year?
உனக்கு போகமுடியுமாக இருக்குமா பல்கலைக் கழகத்திற்கு அடுத்த வருடம்?
Yes, I will be able to go to university next year.
ஆம், எனக்கு போகமுடியுமாக இருக்கும் பல்கலைக் கழகத்திற்கு அடுத்த வருடம்.
No, I won’t be able to go to university next year. (will + not)
இல்லை, எனக்கு போகமுடியாமலிருக்கும் பலகலைக்கழகத்திற்கு அடுத்த வருடம்.

மேலும் 25 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.


aangilam.com 19.mp...

1. I will be able to study.
எனக்கு கற்க முடியுமாக இருக்கும்.

2. I will be able to study both arts and sciences.
எனக்கு இரண்டையும் கற்க முடியுமாக இருக்கும் கலையையும் விஞ்ஞானத்தையும்.

3. I will be able to dance.
எனக்கு நடனமாட முடியுமாக இருக்கும்.

4. I will be able to vote.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும்.

5. I will be able to go to China.
எனக்கு போகமுடியுமாக இருக்கும் சீனாவிற்கு.

6. I will be able to improve my English knowledge.
எனக்கு வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும் ஆங்கில அறிவை.

7. I will be able to speak in English.
எனக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

8. I will be able to become a chief executive.
எனக்கு ஆகமுடியுமாக இருக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரியாக.

9. I will be able to pass the exam.
எனக்கு தேர்வடைய முடியுமாக இருக்கும் பரீட்சையில்.

10. I will be able to fly to Canada
எனக்கு பறக்க முடியுமாக இருக்கும் கனடாவிற்கு.

11. I will be able to vote via internet.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும் இணையத்தின் ஊடாக.

12. I will be able to solve problems
எனக்கு தீர்க்க முடியுமாக இருக்கும் பிரச்சினைகளை.

13. I will be able to become an IPS officer.
எனக்கு ஆகமுடியுமாக இருக்கும் ஓர் IPS பணியாளராக.

14. I will be able to receive voice-mail.
எனக்கு பெறமுடியுமாக இருக்கும் குரலஞ்சல்.

15. I will be able to come to New York.
எனக்கு வரமுடியுமாக இருக்கும் நியூ யோர்கிற்கு.

16. I will be able to get my land.
எனக்கு பெற முடியுமாக இருக்கும் எனது நிலத்தை.

17. I will be able to become famous in the world.
எனக்கு பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும் உலகில்.

18. I will be able to buy a submarine.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஓர் நீர்மூழ்கிக்கப்பல்.

19. I will be able to do my duty accurately.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் எனது கடமையை மிகச்சரியாக.

20. I will be able to marry next year.
எனக்கு திருமணம் செய்யமுடியுமாக இருக்கும் அடுத்த வருடம்.

21. I will be able to swim in the sea.
நான் நீந்த முடியுமாக இருக்கும் கடலில்.

22. I will be able to solve problems.
எனக்கு தீர்க்க முடியுமாக இருக்கும் பிரச்சினைகளை.

23. I will be able to submit to the court.
எனக்கு ஒப்படைக்க முடியுமாக இருக்கும் நீதிமன்றில்.

24. I will be able to demonstrate that.
எனக்கு மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும் அதை.

25. I will be able to win the world
எனக்கு வெல்ல முடியுமாக இருக்கும் உலகை.

Homework:

A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (will be able to) ஆற்றல் மற்றும் சாத்தியத்தை வெளிப்படுத்தும் எதிர்கால வாக்கியங்களை உதாரணமாக எடுத்து உங்கள் எதிர்கால வாழ்க்கையில் உங்களால் என்னென்ன செய்ய முடியுமாக இருக்கும், என்னென்ன செய்ய முடியாமலிருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களோ அவற்றை இரண்டுப் பட்டியல்களாக எழுதுங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் அதிவேகமாக வளர்த்துக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் எளிதாக பெற்றுவிடலாம்.

D. உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.

குறிப்பு:

ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியமானது. எனவே இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

இப்பாடத்தின் I will be able to என்பதன் சுருக்கப்பயன்பாடு I’ll be able to ஆகும்.

இதன் எதிர்மறை வாக்கிய அமைப்புகளில் (won’t be able to) என்பதில் காணப்படும் “won’t” என்பது will + not இன் சுருக்கப்பயன்பாடாகும்.


ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech)
மனித உடலின் செயல்பாடுகளுக்கு கை, கால், தலை, மூட்டு என ஒவ்வொரு உடற்கூறுகளும் பயன்படுவதுப் போன்றே, ஒரு மொழியின் பேச்சுக்கு அம்மொழியின் சொற்கூறுகள் அவசியமாகின்றன. எமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்கதற்கான தனித்த செயல்பாடுகளைக் கொண்டிருப்பது போன்றே; ஒவ்வொரு சொற்களின் வகைகளும் அதற்கதற்கான தனித்த செயல்பாடுகளை கொண்டுள்ளன. அதேவேளை அச்சொற்கள் தனித்தும், ஒருமித்தும், இடத்திற்கு ஏற்ப மாறுபட்டும் பயன்படுபவையாகும்.

உலகில் எந்த மொழியானாலும் ஒரு மொழியின் மூலம் சொற்களே (Words) ஆகும். ஒரு மொழியில் புழங்கும் சொற்களை வைத்தே அது எம்மொழி என அறிய முடிகிறது. சொற்கள் எனும் போது சொற்களின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. பெயர்களை அல்லது பொருற்களை குறிப்பதற்கான சொற்கள் பெயர்சொற்கள் என்றும், வினையை  விவரிப்பதற்கான சொற்கள் வினைச்சொற்கள் என்றும், பொருற்களின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் பெயரெச்சங்கள் என்றும், வினையின் தன்மையை விவரிப்பதற்கான சொற்கள் வினையெச்சங்கள் என்றும், ஒருவரின் அல்லது ஒன்றின் பெயரைக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிப் பேசுவதற்கான சொற்கள் சுட்டுப்பெயர்ச்சொற்கள் என்றும், வாக்கியங்களை அல்லது சொற்களை இணைப்பதற்கு இடையே பயன்படும் சொற்கள் இணைப்புச்சொற்கள் என்றும்,   பேசும் மொழியில் பயன்படும் சொற்களின் பயன்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும், கற்பதற்கும் சொற்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் “பேச்சின் கூறுகள்” என்று அழைக்கப்படுகின்றது. சிலர் “சொற்களின் வகைகள்” என்றும் கூறுவர்.

ஆங்கிலத்தில் பேச்சின் கூறுகளை எட்டாக வகைப்படுத்தியுள்ளனர். அவைகளே “ஆங்கிலப் பேச்சின் கூறுகள்” (Parts of Speech in English) ஆகும்.

ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech in English)

Nouns – பெயர்சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
Prepositions – முன்னிடைச்சொற்கள்
Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
Interjections - வியப்பிடைச்சொற்கள்

மேலதிக விளக்கங்களை கீழே பாருங்கள்.

Nouns – பெயர்சொற்கள்
பொருற்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Manager - நிர்வாகி
Car - மகிழுந்து
England - இங்கிலாந்து
Sarmilan - சர்மிலன்
Tamil - தமிழ்

He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. மேலும் >>>

Verbs – வினைச்சொற்கள்
வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Do - செய்
Come - வா
Speak - பேசு
Ask - கேள்
Go - போ

I do a job.
நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Adjectives – பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்
ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படுபம் சொற்கள் பெயரெச்சங்ளாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Red - சிகப்பு
Yellow - மஞ்சள்
Big - பெரிய
Small - சிறிய
Beautiful - அழகான

She is a beautiful girl.
அவள் ஒரு அழகான பெண். மேலும் >>>

Adverbs – வினெயெச்சங்கள் / வினையடைகள்  / வினையுரிச்சொற்கள்
வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக:

Usually - சாதாரணமாக
Really - உண்மையாக/ உண்மையில்
Immediately - உடனடியாக
Quickly - வேகமாக
Softly - மென்மையாக

Usually I do a job.
சாதாரணமாக நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும் >>>

Pronouns – சுட்டுப்பெயர்கள் / பிரதிப்பெயர்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள்
ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:

He - அவன்
She - அவள்
It - அது
him - அவனை
her - அவளை

Sarmilan speaks in English.
சர்மிலன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். மேலும் >>>

Prepositions – முன்னிடைச்சொற்கள்
ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப்பெயர்சொற்களுக்கும் முன்பாக பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

in - இன், இல்
at - இல், ஆல்
on - இல், மேல்
for - காக
since - இருந்து

Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்? மேலும் >>>

Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.

எடுத்துக்காட்டாக:

and - உம்
but - ஆனால்
or - அல்லது
than - விட
because - ஏனெனில்

I ate bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன். மேலும் >>>

Interjections - வியப்பிடைச்சொற்கள்
பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Wow!
Ha!
Hi!
hello!
Oh!

Wow! I won the match!
வோவ்! நான் ஆட்டத்தில் வென்றேன்! மேலும் >>>

Eight Parts of Speech in a Sentence
ஆங்கில மொழியின் பிரதானப் பேச்சின் கூறுகள் எட்டும் ஒரே வாக்கியத்தில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழுள்ள எடுத்துக்காட்டுகள் ஊடாக பார்க்கலாம்.

Sarmilan goes to School. (Three Parts)
Noun Verb Preposition Noun
சர்மிலன் போகிறான் பாடசாலைக்கு.

Sarmilan and his sister go to school. (Five Parts)
Noun Conjunction Pronoun Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

 


Sarmilan and his little sister go to school. (Six Parts)
Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Wow! Sarmilan and his little sister go to school happily. (All Eight Parts of Speech)
Interjection Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun Adverb
வாவ்! சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு மகிழ்ச்சியுடன்.

ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Types of Nouns)
நீங்கள் உங்கள் நண்பர், சகோதரர், உறவினர் எவருடன் என்றாலும் பரவாயில்லை "அனைத்திற்கும் அவசியமானது என்ன?” எனும் கேள்வியை கேளுங்கள். அவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்பதையும் பாருங்கள்.

எமக்கும் எமது பாடசாலை காலத்தில் எமது ஆசிரியர் ஒருவர் இக்கேள்வியை கேட்டிருந்தார். மாணவர்கள் பலவாறு பதிலளித்தனர்.

ஒரு மாணவர் உடனே பதிலளித்தார், “உயிர்".  "உயிருக்கும் அவசியமானது." இன்னொருவர் "உலகம்" என்றார். "அதற்கும் அவசியமானது." ஒரு அறிவியல் மாணவர் "ஒக்சிசன்" என்றார். "அதற்கும் அவசியமானது." சமய நம்பிக்கைக் கொண்ட ஒரு மாணவர் "கடவுள்" என்றார். "கடவுளுக்கும் அவசியமானது."

மாணவர்கள் பலவாறு சிந்திக்கத் தொடங்கினர். ஒவ்வொருவரும் "சூரியன்", “வின்வெளி", “அண்டம்", “பால்வெளி", "உடுமண்டலம்" என கூறிக்கொண்டே போயினர். ஆனால் ஆசிரியரோ அனைத்து பதில்களுக்கும் "அதற்கும் தேவை, அதற்கும் தேவை" என்றே கூறிக்கொண்டு இருந்தார்.

கடைசியில் அவரே விடையளித்தார்; விடை "பெயர்".

ஆம்! அனைத்திற்கும் பெயர் அவசியமல்லாவா? பெயரின்றி ஒன்றை உணர்த்தவோ கூறவோ முடியாது. பெயரைத்தான் பெயர்ச்சொல் என்றும் கூறப்படுகிறது. புதிது புதிதாக கண்டுப்பிடுக்கும் பொருற்களுக்கும் புதுப்புதுபெயர்கள் இடப்படுவதும் "பெயர்" அவசியம் உணரப்படுவதால் தானே? இந்த பெயர்களை அல்லது பெயர்ச்சொற்களை பற்றிதான் இன்று நாம் கற்கப்போகின்றோம்.

பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் "nouns” என அழைக்கப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் "nōmen" (பெயர்) என்ற சொல்லில் இருந்து மருவி ஆங்கிலத்தில் பயன்படும் சொல்லாகும்.

ஆங்கிலப் பெயர்சொற்கள் (Nouns) என்பன மனிதர்கள், இடங்கள், பொருற்கள், உயிரினங்கள், உணர்வுகள் போன்றவற்றை குறிப்பதற்கான "பெயர்கள்" அல்லது "பெயர்ச்சொற்கள்" ஆகும்.

இப்பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவைகளாவன:
Common Nouns
Proper Nouns
Countable Nouns
Uncountable Nouns
Collective Nouns
Concrete Nouns 
Abstract Nouns
Compound Nouns
மேலும் இப்பெயர்ச்சொற்கள் பற்றி பார்ப்போம்.

Common Nouns - பொதுவான பெயர்சொற்கள்
பொதுவான பெயர்சொற்கள் எனும் போது மக்கள், இடங்கள், பொருட்கள், உயிரினங்கள் அனைத்தினதும் பெயர்கள், பொதுவான பெயர்ச்சொற்கள் தான். தமிழில் இதனை "பொதுப் பெயர்ச்சொற்கள்" என அழைப்பதும் உண்டு.

இடங்கள்:
bank = வங்கி
school = பாடசாலை
city = பட்டணம்
shop = கடை
park = பூங்கா
பொருட்கள்:
pencil = பென்சில்
book = பொத்தகம்
chair = கதிரை
table = மேசை
bag = பை
உயிரினங்கள்:
tiger = புலி
bear = கரடி
fish = மீன்
snake = பாம்பு
dog = நாய்
மேலும் பொதுவானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.

Proper Nouns - உரித்தானப் பெயர்சொற்கள்
குறிப்பிட்ட ஒரு பொருள், இடம், மனிதன், மதம், மொழி, மாதம், ஊர், நாடு போன்றவற்றின் உரித்தான பெயர்களையே "உரித்தானப் பெயர்ச்சொற்கள்" என அழைக்கப்படுகின்றன. உரித்தானச்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எவ்விடத்தில் வந்தாலும் அதன் முதலெழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இடங்கள்:
London = இலண்டன்
Jaffna = யாழ்ப்பாணம்
California = கலிபோனியா
Kilinochchi = கிளிநொச்சி
Madurai = மதுரை
மனிதர்கள்:
Sarmilan = சர்மிலன்
Surya = சூர்யா
Tamilvaanan = தமிழ்வாணன்
Kavitha = கவிதா
David = டேவிட்
மொழிகள்:
Tamil = தமிழ்
English = ஆங்கிலம்
French = பிரஞ்சு
Chinese = சீனம்
Cantonese = கந்தோனிஸ்
மதங்கள்:
Hindu = இந்து
Christian = கிறிஸ்தவம்
Islam = இஸ்லாம்
Buddhist = பௌத்தம்
Taoism = டாவோயிசம்
மேலும் உரித்தானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.

Countable Nouns - கணக்கிடுப் பெயர்சொற்கள்
கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் என்பன எண்ணிக்கையால் எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் ஆகும். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் தான்.

எடுத்துக்காட்டாக:
apple = குமழிப்பழம்
dollar = டொலர்
book = பொத்தகம்
spoon = கரண்டி
computer = கணனி
மேலும் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.

Uncountable Nouns - கணக்கிடமுடியாப் பெயர்சொற்கள்
எண்ணிக்கையால் எண்ணி கணக்கிட முடியாதச் சொற்கள் எல்லாமே "கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள்"  ஆகும்.

எடுத்துக்காட்டாக:
love = அன்பு / காதல்
water = தண்ணீர்
happiness = மகிழ்ச்சி
smoke = புகை
milk = பால்
மேலும் கணக்கிடாமுடியாப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.

Collective Nouns - கூட்டுப் பெயர்சொற்கள்
கூட்டம்  அல்லது குழுக்களின் (பலரின் அல்லது பலதின்) கூட்டினை குறிக்கும் பெயர்களை "கூட்டுப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
army = இராணுவம் (பல வீரர்களை குறிக்கும் சொல்)
class = வகுப்பு (பலர் கற்கும் இடம்)
gang = கும்பல் (பலரை குறிக்கும்)
colony = குடியேற்றப் பகுதி/ குடியேற்ற நாடு
school = பாடசாலை 
மேலும் கூட்டுப்பெயர்ச்சொற்கள் பாடத்தைப்  பார்க்கவும்.

Concrete Nouns - திடப் பெயர்சொற்கள்
கண்ணால் பார்க்கவும், கையால் தொடவும் கூடியவற்றை "திடப் பெயர்சொற்கள்" எனலாம். இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ உரித்தானப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடுப் பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக:
tree = மரம்
ball = பந்து
nose = மூக்கு
face = முகம்
book = பொத்தகம்
மேலும் திடப் பெயர்ச்சொற்கள் பாடத்த்தினைப் பார்க்கவும்.

Abstract Nouns - நுண் பெயர்ச்சொற்கள்
நுண் பெயர்ச்சொற்கள் என்பன கண்ணால் பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாத நுண்மையானவைகளாகும். அதனாலேயே அவற்றை "நுண் பெயர்ச்சொற்கள்" எனப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:
skill = திறமை
opinion = கருத்து
law = சட்டம்
ego = தன்முனைப்பு
peace  = அமைதி
மேலும் நுண் பெயர்ச்சொற்கள் அட்டவணை பார்க்கவும்.

Compound Nouns - கலவைப் பெயர்சொற்கள்
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் கலந்து இன்னுமொரு தனிச்சொல்லாக பயன்படும் சொற்களை அல்லது பெயர்களை "கலவைப் பெயர்ச்சொற்கள் என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
blackboard = கரும்பலகை
homeland = தாய்நிலம்
swimming pool  = நீச்சல் தடாகம்
brother-in-law = மைத்துனர்
haircut = தலைமயிர் வெட்டுதல்
ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்திருப்பதன் காரணம்; அவற்றை மாணவர்கள் எளிதாக கற்பதற்காகவே. மேலே வழங்கப்பட்டுள்ள பெயர்ச்சொற்கள் வகையில் இல்லாத "Gerund Nouns", "Predicate Nouns", "Noun as Adjective" போன்றவைகளும் உள்ளன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

ஆங்கிலப் பெயர்சொற்கள்

வணக்கம் உறவுகளே!

Irregular verbs