வணக்கம் உறவுகளே!
வணக்கம் உறவுகளே!
இன்றிலிருந்து “ஆங்கிலம் துணுக்குகள்” எனும் ஒரு பகுதியையும் தொடர்ந்து வழங்கலாம் என்றுள்ளோம். இது எமது வழமையான “ஆங்கில பாடப் பயிற்சி” திட்டத்திலிருந்து வேறுபட்டது. இருப்பினும் இத்துணுக்குகள் ஆங்கிலம் கற்கும் சிலருக்கு, குறிப்பாக ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்போருக்குப் பயன்படும் என கருதுகிறோம்.
நீங்கள் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளை தொடர விரும்புவரானால் ஆங்கில பாடப் பயிற்சி 1 இலிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுதல் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தை, ஏன் ஒரு முழு ஆக்கத்தையே வேண்டுமானாலும் கெப்பிட்டல் எழுத்துக்களிலேயே (CAPITAL LETTERS) எழுதலாம். அது உங்கள் விருப்பம்.
ஆனால் ஆங்கில சிற்றெழுத்துக்களில் (Simple Letters) எழுதுவதானால், ஆங்கில மொழிக்கே உரிய சிறப்பியல்புகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மிக முக்கியம்.
How To Use Capital Letters
1. ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தின் முதல் எழுத்து எப்பொழுதும் கெப்பிட்டல் எழுத்தாகவே இருக்கவேண்டும். (Capital letters are always used at the beginning of a sentence.)
உதாரணம்:
The car is running
I am looking for a job.
He doesn’t understand.
Do you speak in English?
Where are you going?
2. கிழமை, மாதம், பெயர், ஊர், நாடு, மொழி, மதம், போன்றவற்றை எழுதும் பொழுது அதன் முதல் எழுத்தை கட்டாயம் கெப்பிட்டல் எழுத்திலேயே எழுத வேண்டும். இவை வாக்கியத்தின் மத்தியில் வந்தாலும் அப்படித்தான்.
2. கிழமைகள்: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
3. மாதங்கள்: January, February, March, April, May, June, July, August, September, October, November, December
4. பெயர்கள்: Ellalan, Iravanan, Sarmilan, Kavitha, Thamilovia, Tamilnenjan, Tamilselvan
5. ஊர்கள், நகரங்கள்: Jaffna, Chennai, Point Pedro, Betticola, Tricomalee, Madurai, Kilinochchi
6. நாடுகள்: Tamileelam, India, America, British, France, Netherland, Norway, Japan
7. மொழிகள்: Tamil, English, Chinese, Latin, French, Indhi
8. மதங்கள்: Hindu, Islam, Christian, Buddhism - God, The Prophet Mohammed, Jesus
9. ஆங்கிலத்தில் "நான்" என்று குறிப்பதற்கு எப்போழுதுமே கெப்பிட்டல் "I" யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். (சிறிய "i" பயன்படுத்துவதில்லை)
10. "சுருக்கப் பயன்பாடுகள்" அதாவது ஒரு முழுச் சொல் அல்லது வாக்கியத்திற்குப் பதிலாக அதன் முதல் எழுத்துக்களை மட்டும் சுருக்கமாக பயன்படுத்தல். இவற்றை ஆங்கிலத்தில் "Abbreviation" என்றழைப்பர்.
உதாரணம்: தொழில் தகமைகளின் சுருக்கம்: MBBS, LLB
சில நாடுகளின் பெயர்களுக்கான சுருக்கம்: USA, UK, UAE
சிலரது பெயர்களின் சுருக்கம்: MGR, MRR
நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் (Use a/an - Vowels and Consonant)
ஆங்கில பெயர்ச்சொற்குறிகளில், பொதுவாக "ஒரு", "ஓர்" என்பதைக் குறிக்க " a", "an" எனும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் பயன்படுகின்றன. இவற்றில் "a" பயன்படும் இடங்கள் எவை, "an" பயன்படும் இடங்கள் எவை என்பதை இன்று பார்ப்போம்.
பொதுவாக மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன்னால் "a" பயன்படுத்தப்படுகின்றது.
ஆங்கில மெய்யெழுத்துக்கள் (consonants) 21 ஆகும்.
b c d f g h j k l m n p q r s t v w x y z = 21
உதாரணமாக:
I am a Sri Lankan
நான் ஒரு இலங்கையன்.
I am a student.
நான் ஒரு மாணவன்.
This is a car
இது ஒரு மகிழுந்து.
This is a book.
இது ஒரு புத்தகம்.
He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.
பொதுவாக உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு முன்னால் "ஓர்", "ஒரு" என்பதைக் குறிக்க "an" பயன்படுகின்றது.
ஆங்கில உயிரெழுத்துக்கள் (Vowels) 5 ஆகும். இவ்வெழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு முன்னால் பொதுவாக "an" பயன்படும்.
a e i o u = 5
உதாரணமாக:
This is an animal - (animal begins with a vowel sound)
இது ஒரு மிருகம்.
I am an Indian
நான் ஒரு இந்தியன்.
I am an English teacher
நான் ஒரு ஆங்கில அசிரியர்.
He is an old man
அவர் ஒரு வயதான(வர்) மனிதர்.
ஒலிப்பு வேறுபாட்டை விளங்கிக்கொள்ளல்
மேற் கூறிய விதிமுறைகள் மாறுப்படும் இடங்களும் உள்ளன. ஏன் மாறுபடுகின்றன என்பதனை கீழே வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள் ஊடாகப் பாருங்கள்.
உயிர் எழுத்துக்களான a, e, i, o, u போன்ற சொற்கள் முன்னால் வந்தாலும் ‘a’ பயன்படும் இடங்களும் உள்ளன.
a user - "யூசர்" எனும் சொல்லின் முதலெழுத்து (u) உயிரெழுத்தாக இருந்தாலும், அது "உ” எனும் உயிரொலியாக அல்லாமல் “யு” எனும் மெய்யொலியாகவே ஒலிக்கப்படும். அதனாலேயே ‘a’ பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். (sounds like 'yoo-zer,' i.e. begins with a consonant 'y' sound, so 'a' is used)
a university - இதன் ஒலிப்பும் "உ” எனும் உயிரொலியாக அல்லாமல் “யு” எனும் மெய்யொலியாக ஒலிப்பதனாலேயே ‘a’ பயன்படுத்தப்படுகிறது
a European country – இதிலும் ‘இ’ எனும் உயிரொலியாக அல்லாமல் "யு’ எனும் மெய்யொலியாக ஒலிப்பதே "a" இடப்பட்டுள்ளதற்கான காரணம். (sounds like 'yer-o-pi-an,' i.e. begins with consonant 'y' sound)
மெய் எழுத்து முன்னால் வந்தாலும் ‘an’ பயன்படும் இடங்கள்.
an hour - என்பதில் “hour” என்பது “our” போல் “அ” உயிரொலியாக ஒலிப்பதால் “an” பயன்படுத்தப்படுகிறது. (sounds like 'a-our,' begins with vowels 'a' sound)
an honor - இதுவும் “honor” என்பது “onor” போல் “அ” உயிரொலியாக ஒலிப்பதால் “an” பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை சரியாக கவனித்தீர்களானால், உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்கள் மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்கள் என்று பார்க்காமல், உயிரொலி ஒலிப்புச் சொற்கள், மெய்யொலசொலிப்புச் சொற்கள் எனும் அடிப்படையில், சொற்களின் ஒலிப்புக்கு அமைவாகவே, நிச்சயற்ற பெயர்ச்சொற்குறிகள் இடம்பெறுகின்றன என்பதை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.
இந்த நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகளின் பயன்பாடுகளின் பொழுது ஆங்கிலேயர்களும் பிழை விட்டுவிடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் இவற்றை நாம் முறையாக விளங்கிக் கற்பது எமக்கே பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்புடைய பாடங்கள்:
ஆங்கில பெயர்ச்சொற்குறிகள் (Articles)
நிச்சயப் பெயர்ச்சொற்குறி உச்சரிப்பு (The vs Thee)
நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகை தந்தவரானால், உங்கள் ஆங்கிலப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் ஏனையப் பாடங்களை தொடரலாம். அதுவே இந்த ஆங்கிலப் பயிற்சி நெறியை தொடர எளிதானதாக இருக்கும்.
நன்றி!
ஆங்கிலம் துணுக்குகள் 3 (Date and Money)
சாதாரணமாக தமிழில் "ஆண்டை" இலக்கங்களில் எவ்வாறு எழுதுகின்றோமோ; அவ்வாறே பேசுகின்றோம். எழுத்துக்களில் எழுதும் பொழுதும் அவ்வாறே எழுதுகின்றோம்.
ஆனால் ஆங்கிலத்தில் அப்படியில்லை. அநேகமாக நான்கு இலக்கங்களில் எழுதும் "ஆண்டை" பேசும் பொழுது இரண்டாகப் பிரித்து இரட்டை இரட்டை இலக்கங்கள் போன்றே பேசப்படுகின்றது.
உதாரணம்:
1954 – nineteen fifty-four
1977 – nineteen seventy-seven
1983 – nineteen eighty-three
தமிழில் பேசுவதுப் போன்றே ஒரே தொடராகப் பயன்டுத்தும் சந்தர்ப்பங்கள்.
2000 = two thousand - இரண்டாயிரம்
2001 = two thousand and one - இரண்டாயிரத்து ஒன்று
2002 = two thousand and two - இரண்டாயிரத்து இரண்டு
2009 = thousand and nine - இரண்டாயிரத்து ஒன்பது
இனி மீண்டும் இரட்டை இரட்டை இலக்கங்களாக மாறுப்படுகின்றன.
2010 = twenty ten
2011 = twenty eleven
2012 = twenty twelve
கவனிக்கவும்.
2010 = twenty ten - இதனை "two thousand and ten" என்று கூறுவதில்லை.
Money
பொதுவாக தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி நாணயத்தின் தொகையை இலக்கங்களில் எழுதும் போது, குறிப்பிட்ட நாணயத்திற்கு வழங்கப்படும் பெயரை அதாவது 'ரூபாய்' அல்லது 'டொலர்' என்பதை இலக்கங்களிற்கு முன்னதாகவே எழுதப்படுகிறது.
உதாராணமாக:
ரூ100
$150
£200
ஆனால் பேசும் பொழுது நாணயத்தின் தொகையை முதலில் கூறி, அதன் பின்பே நாணயத்தின் பெயரைக் குறிப்பிடப்படுகின்றது.
உதாரணமாக:
ரூ 100 - Hundred rupees
ரூ 150 - One hundred and fifty rupees
இவற்றையும் பாருங்கள்
ரூ120.55 = One hundred and twenty rupees, fifty-five cent.
நூற்றி இருபது ரூபாய்(கள்) ஐம்பத்து ஐந்து சதம்.
$225.10 = Two hundred and twenty five dollars, ten cent.
இருநூற்றி இருபத்தைந்து டொலர்(கள்) பத்து சதம்.
£450. 21 = Four hundred and fifty pounds, twenty-one pence.
நானூற்றி ஐம்பது பவுண்ட்ஸ்(கள்) இருபத்தி ஒரு ப்பென்ஸ்
Comments
Post a Comment