ஆங்கிலப் பெயர்சொற்கள்
ஆங்கிலப் பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)
மக்கள், இடங்கள், பொருற்கள் போன்ற பெயர்கள் "பொதுவானப் பெயர்சொற்கள்" ஆகும். தனிப்பட்ட ஒரு நபரையோ, குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, பொருளையோ இந்த பொதுவானப் பெயர்சொற்கள் குறிப்பதில்லை.
முக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவும் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.
அநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.
Common Nouns
No: Common Nouns தமிழ்
1 actor நடிகர்
2 actresssuhashuhasi நடிகை
3 student மாணவன்
4 river ஆறு
5 holiday விடுமுறை
6 religion மதம்
7 month மாதம்
8 day நாள்
9 boy பையன்
10 girl சிறுமி
11 school பாடசாலை
12 car மகிழூந்து
13 store பண்டகச்சாலை
14 shop அங்காடி
15 language மொழி
16 dog நாய்
17 city நகரம்
18 man மனிதன்
19 coffeeshop கோப்பிக்கடை
20 waiter சிப்பந்தி
21 jeans காற்சட்டை
22 mobile அழைப்பேசி
23 book பொத்தகம்
24 building கட்டிடம்
25 country நாடு
Proper Nouns
குறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே "உரித்தானப் பெயர்சொற்கள்" என்று அழைக்கப்படுகின்றது.
இப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.
No: Proper Nouns தமிழ்
1 Kamalahasan கமலஹாசன்
2 Suhashini சுஹாசினி
3 Sarmilan சர்மிலன்
4 Mississippi river மிஸ்ஸிசிப்பி ஆறு
5 4th of July யூலை நான்காம் திகதி
6 Hindu இந்து
7 November கார்த்திகை
8 Monday திங்கள்
9 Sarmilan சர்மிலன்
10 Tamilovia தமிழோவியா
11 Kilinochchi central college கிளிநொச்சி மத்திய கல்லூரி
12 BMW பி.எம்.டப்ளிவ்
13 Pandian store பாண்டியன் பண்டகச்சாலை
14 Wal-Mart வோல்-மார்ட்
15 Tamil தமிழ்
16 Puppy பப்பி
17 Chennai சென்னை
18 Uruththiran உருத்திரன்
19 Starbuks ஸ்டார்பக்ஸ்
20 Peter பீட்டர்
21 Levi's லெவீஸ்
22 Nokia நொக்கியா
23 Thirukkural திருக்குறள்
24 IFC Tower ஐஎவ்சி கட்டிடம்
25 Hong Kong ஹொங்கொங்
Common Nouns and Proper Nouns
இப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.
மனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.
உதாரணம்:
"நடிகர்" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் "கமலஹாசன்" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.
No: Common Nouns Proper Nouns
1 actor Kamalahasan
2 actresssshuhashishi Suhashini
3 student Sarmilan
4 river Mississippi river
5 holiday 4th of July
6 religion Hindu
7 month November
8 day Monday
9 boy Sarmilan
10 girl Tamilovia
11 school Kilinochchi central college
12 car BMW
13 store Pandian stores
14 shop Wal-Mart
15 language Tamil
16 dog Puppy
17 city Chennai
18 man Uruththiran
19 coffeeshop Starbuks
20 waiter Peter
21 jeans Levi's
22 mobile Nokia
23 book Thirukkural
24 building IFC Tower
25 country Hong Kong
ஆங்கில பெயர்ச்சொற்களின் வகைகளில் அதிகமாக பயன்படுவது கணக்கிடுப் பெயர்ச்சொற்களும், கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களும் ஆகும். இவற்றை இன்றையப் பாடத்தில் பார்ப்போம். இந்த இரண்டு வகையான பெயர்ச்சொற்களையும் இரண்டு தலைப்புகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் (Countable Nouns)
கணக்கிடுப் பெயர்ச்சொற்களை மிக எளிதாக அறிந்துக்கொள்ளலாம். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய பெயர்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்ச்சொற்களாகும். ( Countable nouns can be "counted".)
No: Countable Nouns தமிழ்
1 bookbookbookbookbook பொத்தகம்
2 applesshuhashishi குமளிப்பழம்
3 dog நாய்
4 cat பூனை
5 animal மிருகம்
6 man மனிதன்
7 person நபர்
8 bottle போத்தல்
9 box பெட்டி
10 coin நாணயம்
11 computer கணனி
12 shirt சட்டை
13 trouser காற்சட்டை
14 cup கோப்பை
15 plate தட்டு
16 spoon கரண்டி
17 fork முற்கரண்டி
18 table மேசை
19 chair கதிரை
20 bag பை
21 carton அட்டைப்பெட்டி
22 bowl கிண்ணம்
23 calendar நாற்காட்டி
24 house வீடு
25 people மக்கள்
உதாரணம்: ஒரு மேசையின் மேல் பொத்தகங்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அவை எத்தனை பொத்தகங்கள் என்று அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வோம்? நாம் ஒன்று, இரண்டு, மூன்று, என எண்ணி கணக்கிடுவோம் அல்லவா? ஆம்! அவ்வாறு எண்ணி கணக்கிடக் கூடிய எல்லா பெயர்களுமே “கணக்கிடுப் பெயர்ச்சொற்கள்” ஆகும்.
எடுத்துக்காட்டாக:
a book, two books, three books.
an apple, two apples, three apples
கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் ஒருமையாகவோ பன்மையாகவோ இருக்க முடியும். (Countable nouns can be singular or plural.)
book – books
apple – apples
இவ்வாக்கியங்களில் ஒருமை பன்மை பயன்படும் விதங்களை அவதானியுங்கள்.
My dog is playing.
My dogs are playing.
கணக்கிடுப் பெயர்சொற்கள் ஒருமையாகப் பயன்படும் போது ஓர், ஒரு (a/ an) போன்ற சுட்டிடைச் சொற்களை நாம் பயன்படுத்த முடியும். (We can use the indefinite article a/an with countable nouns)
My wife is a Doctor.
Sarmilan is an English Teacher.
எண்ணிக்கையை இலக்கங்களால் ஒன்று, இரண்டு, மூன்று என பயன்படுத்துவதுப் போன்றே “கொஞ்சம், ஏதாவது, ஒரு சில, நிறைய” (Some, any, a few, may) போன்ற சொற்களையும் கணக்கிடுப் பெயர்ச்சொற்களுடன் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளன. (We can use some, any, a few, many with countable nouns.)
I need to buy some new trousers
Have you got any pens?
I've got a few dollars.
I haven't got many pens.
கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் (Uncountable Nouns)
எண்ணிக்கை அடிப்படையில் எண்ணி கணக்கிட முடியாதப் பெயர்கள் அல்லது சொற்கள் “கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள்” ஆகும். (Uncountable nouns cannot be counted.) ஆங்கிலத்தில் இதனை “Mass Nouns” என்றும் அழைப்பர்.
உதாரணம்:
No: Uncountable Nouns தமிழ்
1 adviceadviceadviceadvice அறிவுரை
2 bread sshuhashishi வெதுப்பி
3 rice அரிசி/ சோறு
4 sugar சீனி
5 sand மணல்
6 flour மாவு (தூள்)
7 powder துகள்/ பொடி
8 dust தூசு
9 jelly குழம்பு/ பாகு
10 oil எண்ணை
11 water தண்ணீர்
12 juice சாறு
13 milk பால்
14 gas வாயு
15 butter வெண்ணை
16 music இசை
17 furniture தளபாடம்
18 coffee கோப்பி
19 wet ஈரம்
20 messy அசுத்தம்
21 rain மழை
22 knowledge அறிவு
23 electricity மின்சாரம்
24 power சக்தி
25 news செய்தி
சாதாரணமாக கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் ஒருமையானதாகவே கருதப்படுகின்றது. (We usually treat uncountable nouns as singular.)
எடுத்துக்காட்டாக:
Milk – பால்
இது ஒரு ஒருமை சொல்லாகும். இதனை ஒரு போத்தல் பால், இரண்டு போத்தல் பால், மூன்று லீட்டர் பால் என அதன் கொள்ளளவை அளவிட்டுக் கூறமுடியுமே தவிர; ஒரு பால், இரண்டு பால்கள், மூன்று பால்கள் என பாலை கணக்கிட்டு பன்மையாகக் கூறமுடியாது. அதனால் தான் இவற்றை கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.
a liter of milk
a bottle of milk
இதுபோன்ற கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், அளவுகளால் அளவிட்டுப் பேசப்படுகின்றது. அதாவது கொள்ளளவுகளை எண்ணிக்கையால் கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
a glass of water – ஒரு கிளாஸ் (அளவிளான) தண்ணீர்
two glass of water – இரண்டு கிளாஸ் (அளவிளான) தண்ணீர்
three glass of water – மூன்று கிளாஸ் (அளவிளான) தண்ணீர்
இப்பொழுது விளங்குகின்றதா? மேலும் இதுப்போன்ற “கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை” பாகங்களாக, அளவுகளாக, கொள்ளளவுகளாகக் கணக்கிடலாம். அவற்றை கீழுள்ள உதாரணங்களூடாக அறிந்துக்கொள்வோம். இது பிழையற்ற ஆங்கிலப் பயன்பாட்டிற்கு மிகவும் அவசியமானதாகும்.
water, wine, sugar, cheese, meat, butter, ketchup, mustard, rice, etc.,
a glass of water
a bottle of wine
a spoon of sugar
a jug of water
a slice of cheese
a chunk of cheese
a piece of cheese
a piece of meat
a slice of meat
a pound of meat
a bar of butter
a bottle of ketchup
a tube of mustard
a kilo of rice
a plate of rice
நீங்கள் சிலவேளை, ஏன் அரிசியை எண்ணி கணக்கிட முடியாதா என்று கேட்கலாம். சிலர் ஒரு கொத்து அரிசியில் எத்தனை அரிசிகள்? என்று பகிடியாக கேட்பதையும் நாம் பார்த்துள்ளோம். உண்மையில் அரிசி, சோறு, சீனி போன்றவற்றை ஒரு பேச்சுக்காக எண்ணி கணக்கிட முடியும் என்று நாம் கூறினாலும், அவற்றை எண்களால் எண்ணி பயன்படுத்துவதில்லை. காரணம் அவை நமது பார்வைக்கு மிகவும் சிறியதாக இருப்பதனால் மொழி அடிப்படையில் அவற்றை அளவுகளாகவே பயன்படுத்தப் படுகின்றன. (இன்றைய விஞ்ஞான உலகிலோ தூசு, துகள்களைக் கூட கணக்கிடக்கூடிய தொழில் நுற்பச் சாதனங்கள் தோன்றிவிட்டன என்பது வேறு விடயம்.)
கவனிக்கவும்:
1. கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக ஓர், ஒரு (a/ an) போன்ற சுட்டிடைச்சொற்கள் பயன்படுவதில்லை. (They do not take a/an before them.)
2. ஒன்று இரண்டு மூன்று போன்ற எண்ணிக்கையை குறிக்கும் சொற்களை கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களுக்கு முன்பாகப் பயன்படுத்துவது இல்லை.
ஆனால் சிலர் எண்ணிக்கைகளாகப் பயன்படுத்துவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். அவற்றை சற்று தெளிவுப் படுத்திக்கொள்வோம்.
Usually I have two coffees a day.
சாதாரணமாக நான் அருந்துகிறேன் இரண்டு கோப்பிகள் ஒரு நாளைக்கு.
இவ்வாக்கியத்தை சற்று அவதானியுங்கள். இங்கே “இரண்டு கோப்பிகள்” (two coffees) எனும் சொல், எண்ணிக்கை அடிப்படையில் “இரண்டு” என பொருள் கொள்வது தவறாகும். அதாவது “இரண்டு கோப்பைகள் கொள்ளளவிலான கோப்பி” என்பதையே மேலுள்ள வாக்கியம் குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (Here coffees refers to the number of cups of coffee.)
இவ்வாக்கியத்தை இவ்வாறு கூறுவதே மிகவும் பொருத்தமானது.
Usually I have two cups of coffee a day.
சாதரணமாக நான் அருந்துகிறேன் இரண்டு கோப்பை (அளவிளான) கோப்பி ஒரு நாளைக்கு.
கேள்விகள் கேட்கும் பொழுது இவ்வாறு கேளுங்கள்.
Can/Could I have some coffee, please?
Can/Could I have a cup of coffee, please?
இதுப்போன்ற கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் சில சமயங்களில் கணக்கிடக்கூடிய பெயர்ச்சொற்கள் போன்று மயங்கவைப்பதும் உண்டு. இவற்றை அவதானித்துப் பார்ப்பீர்களானால் இவை வகைகளாகவோ, அளவுகளாகவோ, கொள்ளளவுகளாகவோ இருக்கும். எனவே இப்பயன்பாட்டை அறிந்து குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
3. some, any, a little, much போன்ற சொற்களையும் கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களுடன் பயன்படுத்தலாம்.
I have got some money.
Have you got any rice?
I have got a little money.
I haven't got much rice.
4. ஆங்கிலத்தில் சில கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள், தமிழ் உற்பட சில மொழிகளில் கணக்கிடக் கூடிய பெயர்ச்சொற்களாக பயன்படுகின்றன. (Some uncountable nouns in English are countable in other languages including Tamil. ) இவை குழப்பமாகவும் இருக்கலாம். இவற்றை நாம் விளக்கமாக அறிந்துக்கொள்வது பயனுள்ளதாகும்.
Accommodation - தங்குமிடம்
advice - அறிவுரை
baggage – பயணப் பொதி/ மூட்டை
bread - வெதுப்பி
equipment - சாதனம்
furniture - தளபாடம்
garbage - குப்பை
information - தகவல்
knowledge - அறிவு
luggage - பயணப் பொதி/ பெட்டி
money - பணம்
news - செய்தி
progress - அபிவிருத்தி
research - மீளாய்வு
travel - பயணம்
work - வேலை
மேலுள்ள பெயர்ச்சொற்களை நாம் தமிழில் தங்குமிடம் – தங்குமிடங்கள், அறிவுரை - அறிவுரைகள், பொதி – பொதிகள், வெதுப்பி – வெதுப்பிகள், சாதனம் – சாதனங்கள், தளபாடம் – தளபாடங்கள், குப்பை – குப்பைகள், தகவல் – தகவல்கள், அறிவு – அறிவுகள், பொதி – பொதிகள், செய்தி – செய்திகள், அபிவிருத்தி – அபிவிருத்திகள், மீளாய்வு – மீளாய்வுகள், பயணம் – பயணங்கள், வேலை – வேலைகள் என்று ஒருமையாகவும் பன்மையாகவும் (அதாவது கணக்கிடு பெயர்ச்சொற்களாக) பயன்படுத்துகின்றோம். ஆனால் ஆங்கிலத்தில் அவ்வாறு பயன்படுத்துவதில்லை; மாறாக கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களாகவே பயன்படுத்துகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இந்த கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை பன்மையாக வெளிப்படுத்த வேண்டுமாயின் ஆங்கில மொழியில் அவற்றின் அளவை, பாகத்தை, கொள்ளளவை கணக்கிட்டுக் கூறவேண்டும். இங்கே எடுத்துக்காட்டாக அடிக்கடி பயன்படும் சொற்றொடர்கள் சில:
accommodation - a place to stay
advice - a piece of advice
baggage - a piece of baggage
bread - a slice of bread, a loaf of bread
equipment - a piece of equipment
furniture - a piece of furniture
garbage - a piece of garbage
information - a piece of information
knowledge - a fact
luggage - a piece of luggage, a bag, a suitcase
money - a note, a coin
news - a piece of news
research - a piece of research, a research project
travel - a journey, a trip
work - a job, a position
சரி! இனி உங்கள் பயிற்சிகளைத் தொடருங்கள்.
ஏனைய பெயர்ச்சொற்களின் அட்டவணைகளை எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.
ஆங்கிலப் பெயர்ச்சொற்களின் வகைகள் (Types of Nouns) இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.

Comments
Post a Comment