பயிற்சி - 4
ஆங்கில பாடப் பயிற்சி - 10 (Simple Past Tense)
Grammar Patterns 1 றின் மூன்று மற்றும் நான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். நான் ஏற்கெனவே, எமது ஆங்கிலம் கிரமர் பெட்டன் 1இன், ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய இன்று 3 மற்றும் 4 ஆவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாகக் கற்கப் போகின்றோம்.
3. I did a job
4. I didn’t do a job.
இவை இரண்டும் இறந்தக்கால வாக்கியங்களாகும். இவற்றை தமிழில் கடந்தக்கால வாக்கியங்கள் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் "Simple Past Tense" அல்லது "Past Simple Tense" என்றழைப்பர்.
இந்த "Simple Past Tense" சாதாரண இறந்தக்கால சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb +
I/He/She/It/You/We/They + __ + did a job. இவற்றில் (Auxiliary verb) "துணை வினை" பயன்படாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Negative
Subject + Auxiliary verb + not + Main verb +
I/He/She/It/You/We/They + did + not + do a job
Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb +
Did + I/he/she/it/you/we/they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும், துணை வினை (Auxiliary verb வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால், ஆங்கிலத்தில் எளிதாக கேள்வி பதில் வாக்கியங்களை அமைக்கலாம்.
உதாரணம்:
Did you do a job?
நீ செய்தாயா ஒரு வேலை?
Yes, I did a job
ஆம், நான் செய்தேன் ஒரு வேலை.
No, I didn’t do a job. (did + not)
இல்லை, நான் செய்யவில்லை இரு வேலை.
Did you speak in English?
நீ பேசினாயா அங்கிலத்தில்?
Yes, I spoke in English.
ஆம், நான் பேசினேன் ஆங்கிலத்தில்
No, I didn’t speak in English. (did + not)
இல்லை, நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.
Did you go to school?
நீ போனாயா பாடசாலைக்கு?
Yes, I went to school.
ஆம், நான் போனேன் பாடசாலைக்கு.
No, I didn’t go to school. (did + not)
இல்லை, நான் போகவில்லை பாடசாலைக்கு.
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
1. I answered the phone
நான் பதிலளித்தேன் தொலைப்பேசிக்கு
2. I studied English for ten years.
நான் படித்தேன் ஆங்கிலம் பத்து வருடங்களாக.
3. I applied for a vacancy.
நான் விண்ணப்பித்தேன் ஒரு தொழிலுக்காக.
4. I forgave him.
நான் மன்னித்தேன் அவனை.
5. I traveled by MTR.
நான் பயணம் செய்தேன் MTR ல். (நவீன நிலத்தடித் தொடரூந்து வண்டி)
6. I came back last Friday.
நான் திரும்பி வந்தேன் கடந்த வெள்ளிக்கிழமை.
7. I asked for an increment.
நான் கேட்டேன் ஒரு (பதவி/சம்பல)உயர்வு.
8. I bought a car.
நான் வாங்கினேன் ஒரு மகிழூந்து.
9. I wrote an article.
நான் எழுதினேன் ஒரு கட்டுரை.
10. I borrowed money from Sarmilan.
நான் கடன் வாங்கினேன் காசு சர்மிலனிடமிருந்து.
11. I lent a book to Ravi.
நான் இரவல்/கடன் கொடுத்தேன் ஒரு புத்தகம் ரவிக்கு
12. I played the guitar.
நான் வாசித்தேன் கித்தார்.
13. I boiled water.
நான் கொதிக்கவைத்தேன் தண்ணீர்.
14. I got wet.
நான் நனைந்தேன்.
15. I gave priority to my works.
நான் முக்கியத்துவம் கொடுத்தேன் எனது வேலைகளுக்கு.
16. I published a post.
நான் பதிவிட்டேன் ஒரு பதிவு.
17. I got an appointment.
நான் பெற்றேன் ஒரு நியமனம்.
18. I got into the bus.
நான் ஏறினேன் பேரூந்துக்குள்.
19. I got a loan from the bank.
நான் பெற்றேன் ஒரு கடன் வங்கியிலிருந்து.
20. I read Thinakkural News paper.
நான் வாசித்தேன் தினக்குரல் செய்தித் தாள்.
21. I escaped from the danger.
நான் தப்பினேன் அபாயத்திலிருந்து.
22. I studied in Jaffna.
நான் படித்தேன் யாழ்ப்பாணத்தில்.
23. I ironed my clothes.
நான் அயன் செய்தேன் எனது உடைகளை.
24. I invited my friends.
நான் அழைப்புவிடுத்தேன் எனது நண்பர்களுக்கு.
25. I deposited money in the bank.
நான் வைப்பீடு செய்தேன் காசு வங்கியில்.
26. I did a special project in school.
நான் செய்தேன் ஒரு சிறப்பு திட்டம் பாடசாலையில்.
27. I played football.
நான் விளையாடினேன் உதைப்பந்தாட்டம்
28. I introduced her to my family.
நான் அறிமுகப்படுத்தினேன் அவளை எனது குடும்பத்தாருக்கு.
29. I inquired about this.
நான் விசாரித்தேன் இதைப் பற்றி.
30. I informed to police.
நான் தெரிவித்தேன் காவல் துறைக்கு.
31. I learned English through the medium of Tamil.
நான் கற்றேன் ஆங்கிலம் தமிழ்வழி ஊடாக.
32. I met Kavitha yesterday
நான் சந்தித்தேன் கவிதாவை நேற்று.
33. I married in 1995.
நான் மணம்முடித்தேன் 1995 இல்.
34. I played as a hero.
நான் நடித்தேன் ஒரு கதாநாயகனாக.
35. I visited Thailand last year.
நான் சென்றேன் தாய்லாந்து கடந்த வருடம்.
36. I opened a current account.
நான் திறந்தேன் ஒரு நடைமுறைக் கணக்கு.
37. I sent a message.
நான் அனுப்பினேன் ஒரு தகவல்.
38. I paid in installments.
நான் செலுத்தினேன் (பணம்) தவணைமுறையில்.
39. I taught English.
நான் படிப்பித்தேன் ஆங்கிலம்.
40. I went to the university.
நான் சென்றேன் பல்கலைக்கழகத்திற்கு.
41. I repaid the loan.
நான் திரும்ப செலுத்தினேன் கடன்.
42. I arrived ten minutes ago.
நான் வந்தேன் பத்து நிமிடங்களுக்கு முன்பு.
43. I lived in Bangkok for two years.
நான் வசித்தேன் பேங்கொக்கில் இரண்டு வருடங்களாக.
44. I worked very hard.
நான் வேலை செய்தேன் மிகவும் கடினமாக.
45. I left from home.
நான் வெளியேறினேன் வீட்டிலிருந்து.
46. I sang a song.
நான் பாடினேன் ஒரு பாடல்.
47. I practiced English last night.
நான் பயிற்சி செய்தேன் ஆங்கிலம் நேற்றிரவு.
48. I forgot my wallet.
நான் மறந்தேன் எனது பணப்பையை.
49. I decorated my house.
நான் அலங்கரித்தேன் எனது வீட்டை.
50. I wrote a letter to my mother.
நான் எழுதினேன் ஒரு கடிதம் என் தாயாருக்கு.
Homework:
பயிற்சி 1:
மேலே I (நான்) என்று எழுதிப் பயிற்சி செய்தோம். அவற்றை அதே ஒழுங்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பின்பற்றி You, He, She, It, We, They எனும் சொற்களுடன் வாக்கியங்களை அமையுங்கள்.
Subject + Main verb +
I spoke in English. - நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
You spoke in English. - நீ பேசினாய் ஆங்கிலத்தில்.
He spoke in English. - அவன் பேசினான் ஆங்கிலத்தில்.
She spoke in English. - அவள் பேசினாள் ஆங்கிலத்தில்.
It spoke in English. - அது பேசியது ஆங்கிலத்தில்.
We spoke in English. நாங்கள்/நாம் பேசினோம் ஆங்கிலத்தில்.
They spoke in English. - அவர்கள் பேசினார்கள் ஆங்கிலத்தில்.
பயிற்சி 2:
ஏற்கெனவே ஆங்கில பாடப் பயிற்சி 4 ல் சாதாரண நிகழ்கால வாக்கியங்கள் 50 கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் இறந்தக்காலச் சொற்களாக மாற்றி பயிற்சி செய்யலாம். அதில் வினைச்சொல் அதாவது பிரதான "verb" கறுப்பு தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும், அந்த இடங்களில் Irregular verbs அட்டவணையப் பார்த்து இறந்தக் கால வினைச் சொற்களாக மாற்றி அமைக்க வேண்டியது தான் உங்கள் வேலை.
பயிற்சி 3:
இன்று 'நடந்து முடிந்த' அல்லது உங்கள் வாழ்க்கையில் 'நிகழ்ந்த/ முடிந்த' அனைத்து இறந்தக்கால விடயங்களையும் தமிழில் எழுதிக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றது போன்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதிப் பாருங்கள். அவ்வாறு உங்கள் பயிற்சிகளை தொடர்வீர்களானால், எமது இந்தப் பாடப் பயிற்சிகள் நிறைவுப் பெறும் போது உங்கள் வாழ்க்கை சுயசரிதையை நீங்களே எழுதியிருப்பீர்கள்.
குறிப்பு:
சாதாரண நிகழ்கால சொற்கள், இறந்தக்கால வினைச்சொற்களாக மாறும் போது ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். இவற்றை இரண்டு விதமாக பிரித்து கற்கலாம்.
1. Regular verbs - with regular verbs + ed
2. Irregular verbs - The past form for irregular verbs is variable. You need to learn it by heart.
1. Regular verbs - எல்லா இறந்தக்கால வினைச்சொற்களின் முடிவிலும் ஒரே ஒழுங்காக – ed இணைந்து வருபவைகள்.
எடுத்துக்காட்டு:
I played cricket
I visited Japan last year
I watched TV last night
Study போன்று "y" எழுத்தில் முடிவடையும் சில சொற்களுடன் மட்டும் - ied இணைந்து வரும்.
I studied English.
Live, Love போன்ற சொற்கள் " e" எழுத்தில் முடிவடைவதால், இவற்றின் இறந்தக்கால சொற்களின் போது - d யை மட்டும் இட்டால் போதும்.
உதாரணம்:
I lived in Australia for two years.
2. Irregular verbs - இந்த இறந்தக்கால Irregular verbs கள் வெவ்வேறு விதமாக ஒரு ஒழுங்கு முறையற்று வரும். இதனால் இவற்றை Irregular verbs அட்டவணையை மனப்பாடம் செய்து தான் கற்றுக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள சொற்களைப் பாருங்கள்.
I fell off a horse yesterday.
I went to school
I taught English
I wrote a letter
I slept yesterday
இறந்தக்கால குறிச்சொற்கள் [Simple Past - Signal words]
yesterday
Last night/ week/ year/century
A month ago
In 2007
In the past
இறந்தக்காலம் என்பது செயல் அல்லது நிகழ்வு ஏற்கெனவே முடிந்து விட்டதைக் குறிக்கின்றது. இது இந்த நொடியில் முடிவுற்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே முடிவுற்ற ஒன்றாகவும் இருக்கலாம். வரைப்படத்தைப் பாருங்கள்.
உச்சரிப்பு (Pronunciation)
குறிப்பாக "regular verbs" களின் முடிவின் போதும் – ed வரும். இருப்பினும் இவற்றின் உச்சரிப்பின் போது சிற்சில மாற்றங்கள் உள்ளன. அவற்றை அவதானித்து பேசிப் பழகுங்கள்.
Agreed - எக்gரீட்d
Loved - லவ்ட்d
Judged - ஜட்ஜ்ட்d
Begged - பெக்ட்d
Cleaned - க்ளீண்ட்d
இவை சொற்களின் முடிவில் (ட்D) எனும் விதமாக ஒலிப்பவைகள்.
Stopped - /t/
Laughed - /t/
Washed - /t/
Watched - /t/
Talked - /t/
இவை முடிவில் (ட்t) போன்று ஒலிப்பவைகள்.
Needed - நீdடட்d
Collected - கலெக்டட்d
இவை முடிவில் (டட்d) போன்று ஒலிப்பவைகள்.
ஆங்கில பாடப் பயிற்சி 11 (Simple Future Tense)
Grammar Patterns -1 றில் ஐந்து மற்றும் ஆறாவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். இன்று அவ்விரண்டு வாக்கியங்களையும் விரிவாக கற்கப் போகின்றோம்.
இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியை எளிதாக தொடர வழிவகுக்கும்.
சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.
5. I will do a job
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் ஒரு வேலை. (சற்றுப் பிறகு)
6. I won’t do a job. (will + not)
நான் செய்ய மாட்டேன் ஒரு வேலை.
மேலுள்ள 5, 6 வரிகளைப் பாருங்கள். இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Simple Future Tense" என்று கூறுவர். இந்த Form ல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will" என்றே பயன்படுத்தப்படுகிறது.
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I /You /He /She /It / We / You /They + will + do a job.
Negative
Subject + Auxiliary verb + not + Main verb
I /You /He /She /It /You /We /They + won’t + do a job
Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Will + I /you /he /she /it /you /we /they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb" துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.
இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் நாமாகவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைப்பது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.
Will you do a job?
நீ செய்வாயா ஒரு வேலை?
Yes, I will do a job
ஆம், நான் செய்வேன் ஒரு வேலை.
No, I won’t do a job. (will + not)
இல்லை, நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.
Will you speak in English?
நீ பேசுவாயா அங்கிலத்தில்?
Yes, I will speak in English.
ஆம், நான் பேசுவேன் ஆங்கிலத்தில்
No, I won’t speak in English. (will + not)
இல்லை, நான் பேசமாட்டேன் ஆங்கிலத்தில்.
Will you go to school?
நீ போவாயா பாடசாலைக்கு?
Yes, I will go to school.
ஆம், நான் போவேன் பாடசாலைக்கு.
No, I won’t go to school. (will + not)
இல்லை, நான் போகமாட்டேன் பாடசாலைக்கு.
இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை நீங்களாகவே கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் எளிதாக மேம்படுத்திக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் விரைவில் பெற்றுவிடலாம்.
சரி பயிற்சியைத் தொடருங்கள்.
1. I will open a current account.
நான் திறப்பேன் ஒரு நடைமுறைக் கணக்கு.
2. I will apply for vacancies.
நான் விண்ணப்பிப்பேன் தொழில்களுக்காக.
3. I will speak in English fluently.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில் சரளமாக.
4. I will ask for an increment.
நான் கேட்பேன் ஓர் (பதவி/சம்பளம்) உயர்வு.
5. I will ask for a transfer.
நான் கேட்பேன் ஒரு இடமாற்றம்.
6. I will celebrate my birthday.
நான் கொண்டாடுவேன் எனது பிறந்தநாளை.
7. I will consult Dr. Sivaram.
நான் (மருத்துவ) ஆலோசனை பெறுவேன் மருத்துவர் சிவராமிடம்.
8. I will control my temper.
நான் கட்டுப்படுத்துவேன் எனது கோபத்தை.
9. I will negotiate my salary.
நான் பேரம் பேசுவேன் எனது சம்பளத்தை.
10. I will stop smoking.
நான் நிறுத்துவேன் புகைப்பிடிப்பதை.
11. I will help others.
நான் உதவுவேன் மற்றவர்களுக்கு.
12. I will open a saving account.
நான் திறப்பேன் ஒரு சேமிப்பு கணக்கு.
13. I will obey the rules and regulations.
நான் கீழ்படிவேன் சட்டத் திட்டங்களுக்கு.
14. I will pick up this work.
நாம் பற்றிக்கொள்வேன் இந்த வேலையை.
15. I will resign from the job.
நான் இராஜினமா செய்வேன் வேலையிலிருந்து.
16. I will correct the mistakes.
நான் சரிப்படுத்துவேன் பிழைகளை.
17. I will play football.
நான் விளையாடுவேன் உதைப்பந்தாட்டம்.
18. I will do my duty.
நான் செய்வேன் எனது கடமையை.
19. I will follow a computer course.
நான் பின்பற்றுவேன் ஒரு கணனி பாடப் பயிற்சி.
20. I will forget her.
நான் மறப்பேன் அவளை.
21. I will solve my problems.
நான் தீர்ப்பேன் எனது பிரச்சினைகளை.
22. I will speak English in the office
நான் பேசுவேன் ஆங்கிலம் பணியகத்தில்.
23. I will go to the university.
நான் போவேன் பல்கலைக்கழத்திற்கு.
24. I will translate English to Tamil.
நான் மொழிமாற்றுவேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.
25. I will give up this habit.
நான் விட்டுவிடுவேன் இந்த தீயப்பழக்கத்தை.
26. I will study for the exam.
நான் படிப்பேன் பரீட்சைக்காக.
27. I will do my homework.
நான் செய்வேன் எனது விட்டுப்பாடம்.
28. I will become stronger.
நான் பலசாலியாவேன்.
29. I will become a chief executive in the company.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக இந்த நிறுவனத்தில்.
30. I will become the Prime Minister of India.
நான் பிரதமராவேன் இந்தியாவின்.
31. I will take a treatment for my hand.
நான் எடுப்பேன் ஒரு சிகிச்சை எனது கைக்கு.
32. I will introduce him to you.
நான் அறிமுகப்படுத்துவேன் அவனை உனக்கு.
33. I will untie this knot.
நான் அவிழ்ப்பேன் இந்த முடிச்சை.
34. I will build my dream house.
நான் கட்டுவேன் எனது கனவு வீட்டை/மாளிகையை.
35. I will co-operate with others.
நான் ஒத்துழைப்பேன் மற்றவர்களுடன்.
36. I will discuss about this problem.
நான் கலந்தாலோசிப்பேன் இந்தப் பிரச்சினையைப் பற்றி.
37. I will drop you in Vavuniya junction.
நான் இறக்குவேன் உன்னை வவுனியா சந்தியில்.
38. I will buy a car.
நான் வாங்குவேன் ஒரு மகிழுந்து.
39. I will bank the money.
நான் வைப்பிடுவேன் வங்கியில்.
40. I will come up in my life.
நான் முன்னேறுவேன் வாழ்க்கையில்.
41. I will draw salary US$ 100,000 monthly.
நான் பெறுவேன் சம்பளம் ஒரு லட்சம் டொலர் மாதாந்தம்.
42. I will fly to America.
நான் (விமானத்தில்) பறப்பேன் அமெரிக்காவிற்கு.
43. I will go to Europe.
நான் போவேன் ஐரோப்பாவிற்கு.
44. I will invite my friends for festival.
நான் அழைப்பேன் எனது நண்பர்களை பண்டிகைக்கு.
45. I will improve my English knowledge.
நான் வளர்ப்பேன் எனது ஆங்கில அறிவை.
46. I will practice English at night.
நான் பயிற்சி செய்வேன் ஆங்கிலம் இரவில்.
47. I will become wealthy.
நான் செல்வந்தனாவேன்.
48. I will get married after few months.
நான் திருமணம் முடிப்பேன் சில மாதங்களில் பிறகு.
49. I will become (CEO) chief executive officer.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக.
50. I will become famous in the world.
நான் பிரசித்திப்பெறுவேன் இந்த உலகில்.
Homework:
A. மேலே நாம் கற்ற சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.
B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களை பார்த்து, இந்த 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.
C. இன்று நாம் கற்ற (Simple Future Tense) சாதாரண எதிர்கால சொற்களை போல், நீங்கள் உங்கள் எதிர்காலத் எண்ணங்களாக, நோக்கங்களாக என்னென்ன செய்ய விரும்புகின்றீர்களோ, அவற்றை ஆங்கிலத்தில் "will" எனும் துணைவினையுடன் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.
சிறிய அறிவுரை
உங்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்வி கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.
ஆங்கில இலக்கணம் படித்தோர்களில் பலர் கூறும் இன்னுமொரு விடயத்தையும் நாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது. அது ஆங்கில செய்திகள் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களை பார்க்கும் போது அதில் பேசுவதை, வாசிப்பதை தம்மால் புரிந்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது என்பதே. இன்னும் சிலர் இடைக்கிடை ஒரு சிலச் சொற்களைத் தவிர துப்பரவாக விளங்குகிறதே இல்லை என்று கூறுவோரும் உள்ளனர்.
சில ஆங்கில பாடப் புத்தகங்களில், குறிப்பாக "Spoken English" புத்தகங்களில் ஆங்கில உச்சரிப்பிற்காக கீழே கொடுக்கப் பட்டிருக்கும் தமிழை வாசித்து வாசித்து கடினப்பட்டு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும் முழுமையான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள முடியாது. சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறுவதும் கடினம்.
இதற்கு நாம் கூறும் அறிவுரை என்னவெனில் ஆங்கிலத்தை தமிழில் பேசுவதுப் போன்று அதே தொனியில் ஆங்கிலம் பேசிப் பழகாதீர்கள் என்பதே.
உதாரணமாக "I am speaking in English" என்று கூறும்போது அதை "அயம் ஸ்பீக்கிங் இன் இங்கிலிஸ்" என்று ஒவ்வொரு சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசிப் பழகாமல், ஒரு வாக்கியத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே சொல்லாக “ஐயம்ஸ்பீக்கிங்கின்ங்கிலீஸ்” என்றுப் பேசிப் பாருங்கள். மிக எளிதாக உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும். அதேவேளை ஆங்கிலேயர் (திரைப்படம், செய்திகள் உட்பட) பேசுவதையும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். BBC போன்ற இணையத்தளங்களில் ஆங்கிலச் செய்திகளை காணொளி வடிவாக அல்லது ஒலி வடிவாகத் தொடர்ந்து கேட்டுவருவதும் பயனளிக்கும்.
BBC Business English இக் காணொளி தொடரினையும் பாருங்கள்.
உச்சரிப்பு (Pronunciation) பயிற்சி கருதி, இங்கே எமது வலைத்தளத்திலும் ஒரு ஆங்கிலப் பெண்மணியின் குரலில் ஒலிப்பதிவிட்டுள்ளோம். அவற்றையும் நீங்கள் கேட்டு பயிற்சி பெறலாம்.
ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியாமானது. எனவே நீங்களும் சிறப்பாக ஆங்கிலம் பேச விரும்புவராயின் இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.
Affirmative short form:
I will - I'llYou will - You'll
He will - He'llShe will - She'llIt will - It'llWe will - We'll
You will - You'll
They will - They'll
Negative short forms:
இந்த எதிர்கால எதிர்மறையாக பயன்படும் துணைவினைகளின் "Short Forms" களை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளனர்.
I will not - I'll not - I won't
You will not - You'll not - You won't
He will not - He'll not - He won't
She will not - She'll not - She won't
It will not - It'll not - It won't
We will not - We'll not - We won't
You will not - You'll not - You won't
They will not - They'll not - They won't
"won’t" என்பது will + not இன் சுருக்கமாகும். (Short form of will + not)
"want" - "வேண்டும்" எனும் பொருளிலும் ஒரு சொல் இருப்பதால், இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். (இரண்டுக்கும் வேறுப்பாட்டை அவதானிக்கவும்.)
குறிப்பு:
ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற்பிரயோகங்களாக ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது அவை:
1. Future “will”
2. Future “going to”
3. Present continuous used as future
4. Future Continuous
5. Future perfect simple
6. Future perfect continuous
இருப்பினும் நாம் இன்றையப் பாடத்தில் Future “will” சாதாரண எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கற்றோம். ஏனையவை எதிர்வரும் பாடங்களில் வரும்.
சாதாரண எதிர்காலம் Future "will"
இதன் பயன்பாட்டை மூன்று விதமாகப் பிரித்துப்பார்க்கலாம்.
1. எண்ணமிடல், நோக்கம், எதிர்ப்பார்ப்பு போன்றவற்றைக் கூறுதல்.
I will come tomorrow. - நான் வருவேன் நாளை
He will work with us. - அவர் வேலை செய்வார் எங்களுடன்.
I will win. - நான் வெற்றிப்பெறுவேன்.
2. முன்கூட்டியே ஒன்றை யூகத்தின் அடிப்படையில் கூறுதல்.
I think the Indian cricket team will win the match.
நான் நினைக்கிறேன் இந்தியன் கிரிக்கெட் குழு வெற்றி பெரும் ஆட்டத்தில்.
I think you will like her.
நான் நினைக்கிறேன் நீ விரும்புவாய் அவளை.
முதல் வாக்கியத்தைப் பாருங்கள் அதில் இந்தியன் கிரிக்கெட் குழு 100% வீதம் வெற்றிப்பெரும் என்று திட்டவட்டமாக கூறப்படவில்லை. எனவே அக்கூற்று நிச்சயமற்றது. ஆனால் எப்படியோ (யூகத்தின் அடிப்படையில்) வெற்றிப்பெரும் எனக் கூறப்படுகின்றது. இதை ஆங்கிலத்தில் "Future prediction" என்று கூறுவர். அதாவது தாம் நினைப்பதே நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்புடன் கூறுவதாகவும் கொள்ளலாம்.
இதுப் போன்ற நிச்சயமற்று கூறும் எதிர்கால வினையை வெளிப்படுத்த "will" உடன் அதிகமாக பயன்படும் சொற்கள் probably, possibly, I think, I hope.
3. மற்றும் இந்த "will" உறுதியளித்து அல்லது உறுதியை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
I will be there on time.
நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்தில்.
அதாவது குறித்த நேரத்திற்கு குறித்த இடத்தில் இருப்பேன் என்பதை முன்கூட்டியே உறுதியாகக் (promise) கூறப்படுகின்றது. (ஆனால் இருப்பாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது)
I promise, I will be there on time, don’t worry.
நான் உறுதியளிக்கிறேன், நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்திற்கு, கவலைப்பட வேண்டாம்.
வரைப்படம்
எமது ஆங்கிலம் வலைத்தளம் குறித்து சில வரிகள்
எமது இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்தச் சில மகிழ்வான வரிகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். வலைத்தளங்களைப் பொருத்த மட்டில் ஒரு மாதத்திற்கு பலப் பதிவிடும் தளங்களே அதிகம். ஒவ்வொரு நாளும் பதிவிடும் தளங்களும் உள்ளன. ஒரே நாளைக்குப் பல பதிவிடுவோரும் உள்ளனர். ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கானப் பதிவிடும் தளங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தளங்களிற்கான வருகையாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், பதிவிடும் நாட்களில் மட்டுமே (திரட்டிகளூடாக) அதிகமான வருகைகள் இருக்கும். (சிலத் தளங்கள் அப்படியல்ல.)
ஆனால் இத்தளத்தில் இப்பதிவோடு சேர்த்து இதுவரை 13 பதிவுகள் மட்டுமே இடப்பட்டுள்ளன. கடந்தப் பதிவு (23 மே 2008) இட்டப் பொழுது வாசகர்களின் வருகை எண்ணிக்கை 11,000 அளவிலேயே இருந்தது. (கிட்டத்தட்ட ஒரு மாதம்) 27 நாட்களுக்குப் பின் இன்று இப்பதிவிடும் இடைவெளிக்குள் இதன் எண்ணிக்கை 21,000 யிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கின்றது. 2008 யூன் 6 ம் திகதி இந்த ஆங்கிலம் வலைத்தளம் குறித்து PKP அவர்கள் தனது பதிவில் அறிமுகப்படுத்திய அன்று வருகையாளர்களின் எண்ணிக்கை "1000" த்தை தாண்டியது.
இந்த “ஆங்கிலம்” வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகின்றது. இந்த வலைத்தளத்தை மற்ற வலைத்தளங்களோடு ஒப்பிடுகையில் பின்னூட்டங்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆனால் இத்தளத்திற்கான வருகையாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதை Traffic Statistics காட்டுகின்றது.
இக் கால இடைவெளிக்குள் கிட்டத்தட்ட 200 க்கும் அதிகமானோர் Subscribers மின்னஞ்சல் ஊடாக பாடப் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். தவிர மின்னஞ்சல் ஊடாக கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதில் ஒரு விடயம் நிதர்சனமாகிறது. இன்றைய காலக்கட்டத்தின் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை மக்கள் நன்குணர்ந்தே உள்ளனர்.
இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்து தமது தளத்தில் முதலில் பதிவிட்டு அறிமுகப்படுத்தியவர் சிறில் அலெக்ஸ். இவரைப் போன்று இன்னும் பல சகப் பதிவர்கள் நண்பர்கள் இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் எனது நன்றிகள். வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக தொடுப்பு கொடுத்துள்ளோருக்கும் மிக்க நன்றிகள்.
திரட்டிகள் என்று கூறுகையில் அநேகமாக ஒரு பதிவு ஒரு சில மணித்தியாளங்களே நிலைத்து நிற்கின்றது. ஆனால் தமிழ்வெளி திரட்டியில் என்று பார்த்தாலும் இந்த ஆங்கிலப் பாடப் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து (எமது சமுதாய வளர்ச்சியின் நலனை முன்னிட்டு என நினைக்கின்றேன்) காண்பிக்கப் படுகின்றது. அவர்களுக்கும் எனது நன்றிகள்.
மேலும் இங்கே நான் தனித்து பதிவிட்டாலும், இச்சிறு முயற்சிக்கு வருகையாளரான உங்கள் அனைவரது ஆதரவும், சக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்பும், பாராட்டுக்களுமே என்னை மென்மேலும் ஊக்கத்துடன் எழுதத் தூண்டுகின்றன. மேலும் எனது பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் எனும் உத்வேகத்தையும் என்னுள் உண்டுப் பன்னுகின்றன.
கிட்டத்தட்ட 8 கோடித் தமிழர்கள் வாழும் இவ்வுலகில், பாதிப் பேராவது ஆங்கிலம் கற்றுச் சிறந்தால் எமது எதிர்காலச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது. எமது எதிர்பார்ப்பு இப்பாடத் திட்டம் அனைத்து தமிழர்களையும் சென்றைடைய வேண்டுமென்பதே ஆகும். முடிந்தவரையில் எனது பணியை எனது சிற்றறிவுக்கு எட்டியவகையில் சிறப்புடன் செய்ய விளைக்கின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்.
ஆங்கில பாடப் பயிற்சி 12 (Past Continuous Tense)
இன்று நாம் விரிவாக கற்கப் போவது Grammar Patterns 1 இன் 9 மற்றும் 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களையாகும். அதே இலக்க வரிசையில் Grammar Patterns 2, Grammar Patterns 3 யும் ஒரு முறைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
9. I was doing a job.
நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
10. I wasn't doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.
இவற்றை தமிழில் “இறந்தக் கால தொடர்வினை” என்று கூறுவர். ஆங்கிலத்தில் "Past Continuous Tense" அல்லது "Past Progressive Tense" என்றழைக்கப்படுகின்றது. அதாவது ஒரு செயல் அல்லது சம்பவம் ஒரு வரையரைக்குள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது என்பதை இந்த "இறந்த காலத்தொடர்வினை" விவரிக்கிறது.
நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் மற்றப் பாடங்களை தொடருங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியை தொடர மிகவும் எளிதானதாக இருக்கும்.
இந்த 9, 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களில் I, He, She, It, போன்றவற்றுடன் "was" இணைந்து வரும். You, We, They உடன் "were" இணைந்து வரும். கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb + ing
I /He /She /It + was + doing a job.
You / We /They + were + doing a job.
இதில் 'Subject' வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது.
Negative
Subject + Auxiliary verb + not + Main verb + ing
I /He /She /It + wasn’t + doing a job
You /We /They + weren’t + doing a job
Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb + ing
Was + I /he /she /it + doing a job?
Were + you /we /they + doing a job? இவற்றில் Auxiliary verb "துணை வினை" வாக்கியத்தின் முன்பாகவும், Subject அதாவது "விடயம்" அதன் பின்னாலும் மாறி வந்துள்ளது.
இப்போது இந்த “இறந்த காலத்தொடர்வினை” வாக்கியங்களை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம். கீழுள்ள உதாரணங்களை பாருங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டால் நீங்களாவே மிக எளிதாக கேள்விப் பதில்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
Were you doing a job?
நீ செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?
Yes, I was doing a job.
ஆம், நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
No, I wasn’t doing a job. (was + not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.
Was he speaking in English?
அவன் பேசிக்கொண்டிருந்தானா அங்கிலத்தில்?
Yes, he was speaking in English.
ஆம், அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்
No, he wasn’t speaking in English. (was + not)
இல்லை, அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.
Were you going to school?
நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்களா பாடசாலைக்கு?
Yes, we were going to school.
ஆம், நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.
No, we weren’t going to school. (were + not)
இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.
இப்போது கீழே (Affirmative Sentences) வாக்கியங்கள் 25 கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். அதன் பின் அவற்றை கேள்வி பதிலாக மாற்றி அமையுங்கள்.
1. I was reading a book.
நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம்.
2. I was looking for a job.
நான் தேடிக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
3. I was studying.
நான் படித்துக்கொண்டிருந்தேன்.
4. I was watching television.
நான் பார்த்துக்கொண்டிருந்தேன் தொலைக்காட்சி.
5. I was making dinner.
நான் தயாரித்துக்கொண்டிருந்தேன் (இரவு) உணவு.
6. I was waiting in the bus stand.
நான் காத்துக்கொண்டிருந்தேன் பேரூந்து நிறுத்தகத்தில்.
7. I was waiting for you.
நான் காத்துக்கொண்டிருந்தேன் உனக்காக.
8. I was talking with my fiancée
நான் பேசிக்கொண்டிருந்தேன் எனது காதலியிடம்/ நிச்சயிக்கப்பட்டவளிடம்.
9. I was snowboarding.
நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன்.
10. I was driving through the desert.
நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருந்தேன் பாலைவனத்தின் ஊடாக.
11. I was sitting at the class room.
நான் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் வகுப்பு அறையில்.
12. I was listening to the news.
நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் செய்திகளுக்கு.
13. I was discussing with my father.
நான் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் எனது தந்தையுடன்.
14. I was complaining to police
நான் முறையிட்டுக்கொண்டிருந்தேன் காவல் துறையிடம்.
15. I was listening to my iPod.
நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் ஐபொட்டிற்கு.
16. I was sleeping last night.
நான் நித்திரைக்கொண்டிருந்தேன் கடந்த இரவு.
17. I was writing the email.
நான் எழுதிக்கொண்டிருந்தேன் மின்னஞ்சல்.
18. I was working at the factory.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் தொழிற்சாலையில்.
19. I was eating bread.
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் வெதுப்பி.
20. I was playing soccer.
நான் விளையாடிக்கொண்டிருந்தேன் சொக்கர்.
21. I was walking on the street.
நான் நடந்துக்கொண்டிருந்தேன் தெருவில்.
22. I was singing in the concert.
நான் பாடிக்கொண்டிருந்தேன் சங்கீதக் கச்சேரியில்.
23. I was wearing a full sleeves shirt.
நான் உடுத்திக்கொண்டிருந்தேன் ஒரு முழுக் கை சட்டை.
24. I was walking past the car.
நான் நடந்துக்கொண்டிருந்தேன் மகிழூந்தைக் கடந்து.
25. I was eating ice-cream.
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் குளிர்களி.
Homework:
1. இந்த 25 வாக்கியங்களையும், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கேள்விப் பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள்.
2. மேலுள்ள அதே 25 வாக்கியங்களை He, She, It, You, We, They போன்றச் சொற்களை பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள் பார்க்கலாம். நினைவில் வைத்துக்கொள்ளங்கள். (I/ He/ She/ It உடன் was + verb with ing வரும். You/ We/ They உடன் were + verb with ing வரும்.)
3. நீங்கள் நேற்று இதே நேரம், கடந்த வாரம், கடந்த மாதம், கடந்த வருடம் எனனென்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? என்னென்ன உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பவற்றைப் பட்டியல் இட்டு மேலே நாம் கற்றதைப் போன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள்.
நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிவதால், உங்களின் வாசிக்கும் ஆற்றலின் தன்மையையும், ஆங்கில அறிவையும் மிக எளிதாக வளர்த்துக்கொள்ளலாம். அதேவேளை எழுத்தாற்றலையும் இலகுவாகப் பெற்றுவிடலாம்.
இலக்கண விதி முறைகள்
இறந்தக்கால தொடர்வினை “Past Continuous Tense” இன் செயல்பாட்டை ஐந்து விதமாக வகைப்படுத்தப்படுத்தலாம். (There are five main uses of this tense) அவை:
1. ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் என்ன நடந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.
உதாரணம்:
I was reading a book yesterday evening.
நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம் நேற்று மாலை.
எப்பொழுது வாசித்துக்கொண்டிருந்தேன்? - நேற்று மாலை.
வாசித்தேன் என்றால் – இறந்தக் காலம்
வாசித்துக்கொண்டிருந்தேன் என்றால் – இறந்தக்கால தொடர்வினை,
அதாவது செயல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு அது தொடர்ச்சியாக ஒரு வரையரைக்குள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. (Action or situation that had already started and was still continuing at a particular time.)
இதுப்போன்ற 25 வாக்கியங்களையே மேலே நாம் பயிற்சி செய்தோம். மேலும் சில வாக்கியங்களை இங்கே பாருங்கள்.
The sun was shining this morning.
சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது காலையில்.
The birds were singing.
பறவைகள் பாடிக்கொண்டிருந்தன.
The children were playing in the garden.
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர் தோட்டத்தில்.
வரைப்படம் - 1
2. ஒரு சம்பவம் அல்லது நேரத்தை குறிப்பிட்டு, அச்சமயம் என்ன நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.
Last night at 6 PM, I was eating dinner.
கடந்த இரவு 6.PM க்கு, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் இரவு சாப்பாடு.
At midnight, we were driving through the desert.
நள்ளிரவில், நாங்கள் வாகனமோட்டிக்கொண்டிருந்தோம் பாலைவனத்தின் ஊடாக.
Yesterday at this time, I was talking with my family.
நேற்று இதே நேரத்தில், நான் பேசிக்கொண்டிருந்தேன் எனது குடும்பத்தாருடன்.
வரைப்படம் - 2
3. இறந்த காலத்தொடர்வினையுடன் always, constantly போன்ற வினையெச்சங்களை இணைத்து பயன்படுத்தல். அநேகமாக இவை வெறுப்பூட்டிக்கொண்டிருந்த, எரிச்சலூட்டிக் கொண்டிருந்த, கோபமூட்டிக்கொண்டிருந்த, திகைப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படுத்தப் பயன்படுகிறது.
இது "used to" என்பதின் பயன்பாட்டிற்கு ஒத்தது. (Used to என்பதன் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடங்களில் கற்கலாம்.)
உதாரணம்:
She was always coming to class late.
அவள் எப்பொழுதும் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்புக்கு தாமதமாக.
Karuna was always irritating me.
கருணா எப்பொழுதும் எரிச்சலூட்டிக்கொண்டிருந்தான் என்னை.
I didn’t like him because, He was constantly talking.
நான் விரும்பவில்லை அவனை ஏனெனில், அவன் (அடிக்கடி) தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
வரைப்படம் - 3
மேலே இலக்கண விதி முறைகளாக 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக பிரித்துக் கற்றாலும் அவை ஒரே மாதிரியானவைகளே. வரைப் படங்களைப் பார்க்கவும்.
4. இரண்டு செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நடைப் பெற்றுக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல். (two actions were happening at the same time.)
உதாரணம்:
Malathi was writing a letter while Pandian was reading the News paper.
மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.
Sothiya was cooking dinner while her friend was setting the table.
சோதியா சமைத்துக்கொண்டிருக்கும் போது அவளுடைய நண்பர் மேசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.
The baby was crying while we were having our dinner.
குழந்தை அழுதுக்கொண்டிருக்கும் போது நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.
I was studying while she was making dinner.
நான் படித்துக்கொண்டிருக்கும் போது அவள் தயாரித்துக்கொண்டிருந்தாள் (இரவு) சாப்பாடு.
People were sleeping while army was shelling.
மக்கள் நித்திரைக்கொண்டிருக்கும் போது இராணுவம் எறிகணை வீசிக்கொண்டிருந்தது.
வரைப்படம் - 4
5. ஒரு செயல் அல்லது நிகழ்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இடையில் ஏற்பட்ட இன்னுமொரு நிகழ்வை வெளிப்படுத்தல். இதில் இறந்தக்கால தொடர்வினையுடன் சாதாரண இறந்தக்கால வினையும் இணைந்து பயன்படும். (use the Past Continuous tense with the Past Simple tense)
உதாரணம்:
I was walking in the park (நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிகழ்வு) when it started to rain. (இடையில் ஏற்பட்ட நிகழ்வு)
I was walking in the park when it started to rain.
நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது மழைப் பெய்ய ஆரம்பித்தது.
I was brushing my teeth when my mother called me.
நான் எனது பற்களை துலக்கிக்கொண்டிருக்கும் போது எனது தாயார் அழைத்தார் என்னை.
I was eating dinner when somebody knocked on the door
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் தட்டினர் கத(வை)வின் மேல்.
Ravi was sleeping last night when someone stole his car.
ரவி நேற்று இரவு நித்திரையடித்துக்கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவர் திருடிவிட்டார் அவனுடைய மகிழூந்தை.
I was walking past the car when it exploded
நான் மகிழூந்தைக் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அது வெடித்தது.
I was having a beautiful dream when the alarm clock rang.
நான் ஒரு அழகான கணவு கண்டுக்கொண்டிருக்கும் போது கடிகாரம் ஒலித்தது.
வரைப்படம் - 5
While, When பயன்பாடுகள்
உதாரணம் 1:

இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்
Malathi was writing a letter
மாலதி எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு கடிதம்.
while – (அப்)போது (எழுதிக்கொண்டிருக்கும் போது)
Pandian was reading the News paper.
பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.
எப்போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்? மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது.
எனவே இவ்விரண்டு வாக்கியங்களையும் இணைத்து "மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் ஒரு செய்தித்தாள்" என ஒரே தொடர் வாக்கியமாக அமைந்துள்ளதை அவதானிக்கவும்.
உதாரணம் 2:

நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது.
இதனையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
I was walking in the park – நான் நடந்துக்கொண்டிருந்தேன் பூங்காவில்.
when – எப்பொழுது (நடந்துக்கொண்டிருக்கும் பொழுது)
it started to rain - ஆரம்பித்தது மழைப் பெய்வதற்கு
எப்பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது? நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது.
எனவே இவ்விரண்டு வாக்கியங்களை இணைத்து "நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப்பெய்ய ஆரம்பித்தது." என்று ஒரே வாக்கியத் தொடராக அமைந்துள்ளது.
இதுப்போன்ற பயன்பாட்டின் போது முதல் நடந்துக்கொண்டிருந்த செயலை அல்லது நிகழ்வை "background situation" என்கின்றனர்.
குறிப்பு:
இவ்வாக்கியங்களை இப்படியும் பயன்படுத்தலாம்.

While I was studying, she was making dinner.
I was walking past the car when it exploded.
When the car exploded, I was walking past it.
Adverb - வினையெச்சம்
கீழுள்ள உதாரணங்களில் இறந்த காலத்தொடர்வினையின் போது always, only, never, ever, still, just போன்ற வினையெச்சங்கள் வினையுடன் இணைந்து பயன்படும் போது, அவ்வாக்கியங்களின் கருப்பொருள் எவ்வாறு மாறுப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
She was coming to class late.
அவள் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக. இவ் வாக்கியத்தில் "வினையெச்சம்" பயன்படுத்தும் போது அதன் அர்த்தத்தை அவதானியுங்கள்.
She was always coming to class late.
அவள் எப்பொழுதுமே வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக.
குறிச்சொற்கள் Signal words
while
when

Comments
Post a Comment